‘இரத்தம் அளியுங்கள், பிளாஸ்மா அளியுங்கள், உயிரைப்பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பொறியாளர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கிளை இணைந்து சிறப்பு இரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் கல்வி நிறுவனங்களின் தலைவர் பெ.குமார் தலைமை வகித்தார், செயலாளர் பெ. மலர், அறங்காவலர் பெ.சசிரேகா வாழ்த்துரை வழங்கினார், இயக்குனர் சுதாகரன் மற்றும் பாலிடெக்னிக் முதல்வர் பாலசுப்ரமணியம் முகாமை துவக்கி வைத்தனர்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் & மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் வசந்த்குமார் முன்னிலை வகித்தனர்.
முகாமில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களிடம் இருந்து 80 யூணிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முகமது அப்பாஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் செய்திருந்தனர்.

செய்திகள் / மாருதி மனோ / எதிரொலி / 8939476777
