மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் தணிகாசலம் வயது 45 இருசக்கர வாகன மெக்கானிக்காக பணிபுரிந்து வரும் இவர் திருநெல்வேலியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டு ராஜபாளையத்திற்கு நள்ளிரவு 12-15 மணியளவில் வந்து சேர்ந்தார். பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் இவரிடம் ஏதோ ஒன்று கேட்டனர். இவர் தனக்குத் தெரியாது என்று கூறியதும் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி கத்தியால் தனிகாசலத்தை குத்தினார்கள்.

இவர் பேருந்து நிலையத்திற்குள் உள்ள புறக்காவல் நிலையத்தை நோக்கி ஓடினார். மீண்டும் அவரை துரத்தி சென்று புறக் காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்தி கொலை செய்தனர். புறக்காவல் நிலையத்தில் காவலர்கள் யாரும் இல்லாததால் பூட்டு போட்டு இருந்தது. தகவல் அறிந்து வந்தவுடன் ராஜபாளையம் வடக்கு போலீசார் மற்றும் டிஎஸ்பி பஸீனா பீவி பிரிந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் விரைந்து வந்து குற்றவாளிகள் குறித்து சிசிடிவி ஆராய்ந்து ராஜபாளையம் அருகே நக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன்(வயது 28) மற்றும் ராஜபாளையம் மங்காபுரம் தெருவை சேர்ந்த காளீஸ்வரன்(வயது 24) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இருவரும் கடுமையான போதையில் பேருந்து நிலையத்திற்கு நின்று கொண்டிருந்த தணிகாசலத்தை வம்பு இழுத்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

பழைய பேருந்து நிலையத்திற்குள் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு சில நாட்களில் மூடப்பட்டு விட்டது. இரவு மற்றும் பகல் நேரங்களிலும் ஒரு போலீஸ் கூட உள்ள இல்லாமல் பூட்டு தொங்கிய நிலையில் காணப்படுகிறது. புறக்காவல் நிலையத்திற்குள் ஒரு போலீஸ் காரராவது இருந்திருந்தால் தணிகாசலம் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும் என்பது பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கருத்தாக உள்ளது.

ராஜபாளையத்தில் கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் பஞ்சு மார்க்கெட்டில் சாலை மறியல் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இரவு நள்ளிரவில் பேருந்துக்காக காத்திருந்த மதுரை சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் தணிகாசலம் வயது 45 என்பவர் இருசக்கர வாகனத்தில் மது போதையுடன் வந்த இருவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராஜபாளையம் அருகே நக்கனேரி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் வயது 28, மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் வயது 24 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மது போதையின் உச்சத்தில் கொலை செய்ததாக இருவரும் போலீசில் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மதுரை ஒத்தக்கடை பகுதியில் தணிகாசலம் உறவினர்கள் ராஜபாளையம் வந்து விபரம் அறிந்து கொளுத்தும் வெயிலில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உறவினர்கள் சுமார் 50 பேர் திரண்டு வந்து கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் டிஎஸ்பி பஸீனா பீவி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதன் காரணமாக தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

செய்திகள் ; ராதாகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed