டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் 41 வது கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி! மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் லயனல்ராஜ் தலைமையில் நீதிபதிகள் சுரேஷ்குமார், கல்யாண மாரிமுத்து தொடங்கி வைத்தனர்…
திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், 41-வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி மருத்துவமனையின் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டீ.லயனல்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், “கண் தானம் செய்வதின் அவசியம் குறித்தும், கருவிழி பார்வை இழப்பைத் தடுப்பதைக் குறித்தும் விரிவாகப் பேசினார்.

மேலும், நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் உலகத் தரத்தில் தையல் இல்லா கருவிழி மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படுவதாக எடுத்து கூறினார்.
இந்த கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலிப் பேரணியை திருநெல்வேலி மாவட்ட போக்சோ வழக்கு சிறப்பு நீதிபதி கே.சுரேஷ் குமார், திருநெல்வேலி மாவட்ட கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.கல்யாண மாரிமுத்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளைத் தலைவர் டாக்டர் எம்.முகமது அபூபக்கர், காவேரி மருத்துவமனையின் மருத்துவ நிருவாகத் தலைவர் டாக்டர் லட்சுமணன், ப்ளீஸ் ஹெல்த் சென்டர் மருத்துவமனை டாக்டர் அன்புராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு மருத்துவ மனித சங்கிலியில் ரோட்டரி கிளப்பின் உறுப்புகள் தான பிரிவின் தலைவர் பி.கே. சரவணன் மற்றும் கல்லூரிகளின் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தேசிய கண்காண விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் தொடர்பான விழிப்புணர்வு ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருவிழி மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வழிகாட்டுதலின் பேரில் மருத்துவமனையின் மேலாளர் பிரபு, பி.ஆர்.ஓ. பேச்சிமுத்து உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி/ நெல்லை மாவட்டம்
