ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சன்னதியில் நேற்று பவித்திர உற்சவம் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் பவித்ர உற்சவம் ஏழு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்
அந்த வகையில், நேற்று இரவு பவித்ர உற்சவம் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது இதனை தொடர்ந்து பெரிய பெருமாள் பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பவித்ர உற்சவத்திற்காக பிரத்தியோகமாக வேத பிரான் பட்டர் குடும்பத்தினரால் தயார் செய்யப்பட்ட மஞ்சள் நிற மாலைகள் பெரிய பெருமாளுக்கும் பூமாதேவி , ஸ்ரீதேவிக்கும் அணிவிக்கப்பட்டும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டும் மஞ்சள் நிற மாலைகளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
