தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து 70க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்

தமிழக தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு அதிகாரிகள் தான் கலங்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என விடுதலை சிறுத்தை கட்சியின் தூய்மை பணியாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில், குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு ₹621 ஊதியத்திற்குப் பதிலாக ₹390 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் தினமும் டன் கணக்கில் சேரும் குப்பைகளை அகற்றும் பணியைப் புறக்கணித்து, 70-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம். இந்தத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

​மதுரை மாவட்ட நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ₹621 ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர்களும் பேரூராட்சி அதிகாரிகளும் இணைந்து தங்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹390 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கி வருவதாகப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

குப்பை அள்ளும் பணிக்குத் தேவையான கையுறைகள், காலணிகள், முகக்கவசங்கள் போன்ற எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதில்லை எனவும் வெற்றுக் கைகளாலே குப்பைகளை அல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும்.

மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை சோழவந்தான் பேரூராட்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் எதிராகத் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் இந்தப் பணிப்புறக்கணிப்பால் 18 வார்டுகளிலும் குப்பைகள் தேங்கும் அபாயம் உருவாகியுள்ளது. தற்போது வரை பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராத நிலையில் 10:00 மணிக்கு மேல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed