திருவள்ளூர் மாவட்டம்,சோழவரம் ஒரக்காடு,பூதூர் வழியாக செல்லும் சாலையில் கனரக வாகனங்களில் சாம்பல் ஏற்ற செல்லும் வாகனங்களால் சாலை மிகவும் சேதம் அடைந்து விட்டது. இவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இதனால் சிரமம் ஏற்பட்டுள்ளது. சைக்கிள் பைக் நடந்து செல்லும் நபர்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கண்ணெரிச்சல், காச நோய், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதால் காவல்துறை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடையென தகவல் பலகை வைத்துள்ளதையும் மீறி வழியாக வாகனங்கள் செல்கிறது.

எனவே உடனடியாக மழைக்காலம் தொடங்கும் முன்பாக சாலையை சீரமைக்கவும் வாகனங்களில் இவ்வழியாக செல்வதை தடுக்கவும் வலியுறுத்தி சோழவரம் ஒரக்காடு கூட்டு சாலையில் அப்பகுதி மக்கள் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சி.பி.ஐ.எம்.எல் மாவட்ட செயலாளர் ஜானகி ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலையில் மறியல் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது.பின்னர் தடுப்புகளின் உள்ளேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரக்காடு ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
