திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பொன்னேரியில் உள்ள
அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் சுதந்திர தின கொடியினை சங்க பொதுச் செயலாளர் வசந்தகுமார் ஏற்றி வைத்தார். பின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 மாற்றுத்திறனாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு காலை உணவாக இட்லி பொங்கல் பூரி வடை உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.

பின்பு, 5 கிலோ அரிசி 1000 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சங்க தலைவர் ஆனந்தி, பொதுச் செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் வழங்கினர். பழவேற்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி தாரா என்பவருக்கு பேக்,நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டது. பின்பு, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சங்க நிர்வாகி மோகன்ராஜ், பணியாளர்கள் பவித்ரா,பிரியா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

