ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், கட்டவிளாகம் ஊராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முறையாகவும், துல்லியமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்கள் , கணக்கெடுப்புப் பணியாளர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் எந்தெந்த அலுவலர்கள் , கணக்கெடுப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
    
மேலும், வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் விவரங்கள் முறையாக சேகரிக்கப்படுகின்றதா என்பதையும் கேட்டறிந்தார்.
     
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின்போது அலுவலர்கள் பொதுமக்களிடம் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வயது, கல்வித்தகுதி, தொழில் உள்ளிட்ட தேவையான அடிப்படை விவரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டு பதிவு செய்வார்கள். இப்பணியை மேற்கொள்ள 2150 கணக்கெடுப்பாளர்கள், 437 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
   

மேலும் , இப்பணியை மேற்பார்வை செய்யும் பொருட்டு ஒவ்வொரு பொறுப்பு அலுவலகத்திற்கும் கண்காணிப்பு அலுவலர், கணிப்பாய்வு அலுவலர், பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, களப்பணியை கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அலுவலர்களுக்கு தேவையான தகவல்களை சரியாகவும், முழுமையாகவும் வழங்கி கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது , திருவாடானை வட்டாட்சியர் ஆண்டி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மாமுஜெயக்குமார்
மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed