கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் பி.சி.சேகர் கலந்துக் கொண்டு தேசிய கொடியினை ஏற்றிவைத்து மகாத்மா காந்தியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு இன்றைய இளைய தலைமுறையின் கையில் உள்ளது என மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து 10 வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவிதம் தேர்ச்சி பெறக் காரணமாக விழங்கும் வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், மற்றும் சக ஆசிரியர்கள் திருமதி அமலா ஆரோக்கிய மேரி, சகாய ஆரோக்கிய ராஜ், சதீஷ், முனிராஜ், சிவகுமார், சுகாசினி, தனஞ்செயன், டேவிட் ஆல்பர்ட் ஆகியோருக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.சி.சேகர் நினைவு பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
தொடர்ந்து நடந்து முடிந்த 10 -ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூண்று இடங்களை பிடித்து அசத்திய கோகுலபிரியா, உஷாராணி, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகளுக்கும் ஊக்கதொகை மற்றும் கேடயம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. தொடர்ந்து 80 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்,சி ரகு ,பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி திம்மி, கௌரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் முருகேசன், பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
