மதுரை விருதுநகர் மாவட்டங்களை இணைத்திருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளது.இந்த கோவிலில், 18 சித்தர்கள் சந்நிதி மற்றும் சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. சதுரகிரி மலையில் அகஸ்தியர், போகர், கோரக்கர் உள்ளிட்ட 18 சித்தர்களும் தங்கி தவம் புரிந்ததாக நம்பப்படுவதால் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலைக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் 7 கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்து செல்ல வேண்டும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வழிபாட்டிற்காக ஆக 10 ந் தேதி முதல் 13ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. 10-ம் தேதி பிரதோஷ வழிபாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில், காட்டுத்தீ பரவியதால் 11- ம் தேதி சிவராத்திரி வழிபாட்டிற்கு மலையேற தடை விதிக்கப்பட்டது. நேற்று ஆக 12 ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காலை 5 மணிக்கு மலையேற அனுமதிக்க கோரி பக்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். மலையில் ஏற்பட்ட காட்டு தீ ஓரளவு கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து காலை 8 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அடிவாரத்தில் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசையை முன்னிட்டு மலையில் உள்ள சந்தன மகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் சுவாமிகளுக்கு 121 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை, விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3,000- க்கும் மேற்பட்ட போலீஸார், வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலைப்பகுதியில் ஆறு இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்துக்கு மேற்பட்ட இடங்களை தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை,தேனி, திண்டுக்கல், ராஜபாளையம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை அடிவாரமான தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தாணிப்பாறை விலக்கில் இருந்து அடிவாரம் செல்லும் சாலையில் ஆங்காங்கே குறுகிய சாலைகள் இருப்பதால் பஸ்கள் விலகி செல்ல முடியமால் போக்குவரத்து நெரிசல் ஏற்படது. இந்த போக்குவரத்து நெரிசலால் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றிருந்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed