திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 36 ம் ஆண்டு தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. ஓராண்டும் ஆடி மாதத்தில் இந்த கோயிலின் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம், அதைப்போல் இந்த ஆண்டும் மிக விமர்சியாக நடத்திட வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்திற்கு முன்பாகவே, இந்த ஆலய நிர்வாகிகள் சார்பிலும் பொதுமக்களும் இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆடி மாதத்தில் நான்காவது வாரம் முத்துமாரியம்மன் ஆலயத்தின் திருவிழாவை நடத்துவது எனவும் அதில் வழக்கம் போல் தீமிதி திருவிழாவும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது அதன்படி இந்த ஆலயத்தின் பற்றிய ஆறாவது ஆண்டு தீமிதி திருவிழா நேற்று மிக விமர்சையாக நடைபெற்றது.

அதில் பொன்னேரியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் ஒன்றிணைந்து, ஒரு வார காலம் காப்பு கட்டி, விரதம் இருந்து தீச்சட்டி ஏந்தி தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேற்று கடனை செலுத்தினர். இந்த தீமிதி திருவிழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழாவின் போது, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரவி அவர்களும், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும், எந்த கட்சி பாகுபாடும் இன்றி அனைத்து கட்சியினரும் பக்தர்களுக்கு தடை இன்றி அன்னதானங்களையும் குளிர்பானங்களையும் வழங்கி உதவினர்.

அதேபோல், சின்னகாவனம் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி அம்மன் ஆலயத்திலும், ஆடி மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று , அப்பகுதி மக்கள் காப்புகட்டி விரதம் இருந்தனர். மதியம் தங்கள் வீடுகளிலும் ஆலயத்திலும் பொது மக்களுக்கு கூழ் ஊட்டினர்.அதனைத் தொடர்ந்து மாலையில் பொங்கல் வைத்தும், அம்மனை அலங்கரித்து சிறப்பு ஆராதனைகள் செய்தும் வழிபட்டனர். மேலும் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதி திருவிழாவும் மிக சிறப்புடன் நடத்தப்பட்டது.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
