கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS உத்தரவிட்டார்.

அவர் உத்தரவின்படி, சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 46,00,000 (நாற்பத்தி ஆறு இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 260 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் 10.08.2026 இன்று ஒப்படைத்தார்.

இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1 கோடி மதிப்புள்ள 580 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன செல்போன் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும், அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது,
Tamilnadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) என்ற காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.
CEIR Portal ( https://www.ceir.gov.in/) என்ற இணையதளத்தில் தொலைந்த செல்போனை Block செய்து கண்டறிய முடியும்.

திருட்டு பொருளை வாங்குவதும் விற்பதும் குற்றம் பொதுமக்கள் செல்போன் எதையும் கண்டெடுத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்
பயன்படுத்திய செல்போன் வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும் என தெரிவித்தார்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed