ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கல்லூரியின் சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பரமக்குடி அரசு கலை கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குழு சார்பாக “போதை பொருள் இல்லாத தமிழ்நாடு ” என்ற திட்டத்தின் கீழ் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

பேரணிக்கு , கல்லூரி முதல்வர் முனைவர் அறிவழகன் தலைமை தாங்கினார் .அனைத்து துறை தலைவர்கள் முன்னிலையில் ,பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் . Koபரமக்குடி அரசு கல்லூரியில் தொடங்கிய பேரணியில் மாணவர்- மாணவியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருள்களை தவிர்ப்போம் ,போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற பதாகைகளை ஏந்தி தீயணைப்பு நிலைய பகுதி ,சந்தக் கடை வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தனர்.

பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . இதனைத் தொடர்ந்து , போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது . இதில் 300க்கு மேற்பட்ட மாணவர் – மாணவியர்கள் கலந்து கொண்டனர் கல்லூரி போதை பொருள் தடுப்பு குழுவின் அலுவலர் பேராசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார் .

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
