திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் நின்று செல்லும்.
இன்று மாலை பெய்த திடீர் மழையால் சாலையில் மழை நீர் தேங்கி நிலையில் இதனை சற்றும் பொருட்படுத்தாமல் சென்னை பெரம்பூரில் இருந்து மீஞ்சூருக்கு வந்த தடம் எண் 164 மின்கல பேருந்து வேகமாக வந்து திடீரென சடன் பிரேக் போட்டு BDO அலுவலக பேருந்து நிறுத்தத்தில் முன்பு நின்றது. இதனை சற்றும் எதிர்பாராத இருசக்கர வாகன ஓட்டிகள் பேருந்தின் இடது புற பக்கவாட்டில் ஒருவரும், பேருந்தின் பின்புறம் ஒருவரும் என இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.


இதனை கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் என்ன ஏது என்று கீழே விழுந்தவர்களை தூக்கும் நோக்கத்தில் சென்றனர். அப்போது அந்த இடத்தில் சாலையின் ஓரமாக நின்றிருந்த சிலர், பேருந்து ஓட்டுநரை பார்த்து, பள்ளிகள் விடும் நேரத்தில் பிள்ளைகள் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறார்கள். சாலையில் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடத்தில் ஏன் இவ்வளவு வேகமாக பேருந்தை இயக்குகிறீர்கள் என கேட்டனர்.

உடனே, பேருந்தில் இருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இறங்கி வந்து மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தவர்களை தூக்கி விட்டு சமாதானம் பேச முயன்ற பொதுமக்களை சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே
உச்ச கட்டமாக ஒருகட்டத்தில் தாக்குதல் நடத்தும் அளவிற்கு பாய்ந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களை பாதுகாப்பாக பயணத்தின் போது அழைத்து செல்வது மட்டுமில்லாமல் சாலையில் செல்லும் பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் வாகனத்தை இயக்க வேண்டிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களே அராஜகப் போக்கில் ஈடுபடுவது அங்குள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777
