கிருஷ்ணகிரி மாவட்டம், மலையாண்ட ஹள்ளி அருகே ஆண்டி மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளக்கல் முருகன் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் 19-ம் ஆண்டு ஆடி கிருந்திகை விழா கடந்த 29-ம் தேதி சேவல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வினை தொன்னையன் கொட்டாய், புரிநகர், டிங்கான் நகர் , எம். ஜி. ஆர். நகர், பரங்கிநகர் ஆகிய கிராம மக்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ சுப்பிரமணியன், ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபோகத்தினை நடத்தினார்கள்.

இதன் முன்னதாக மாப்பிளை வீட்டார் மற்றும் மணமக்கள் வீட்டில் இருந்து மேளத்தாளங்களுடன் பெண்கள் சீர் வரிசைகள் தட்டுகளுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் ஆண்டி மலை அடிவாரத்தில் ஸ்ரீ சுப்பிரமணியன், ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது, கிராம மக்கள் முன்னிலையில் அக்கினி யாக குண்டம் அமைத்து திருமாங்கல்யத்திற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் சம்பிரதாய முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபோகம் பக்தி பரவசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது. பின்னர் மணக்கோலத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்த ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ வள்ளி தெய்வானையின் அருளை வேண்டி ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பத்தர்கள் அனைவருக்கும் அறுசுவை உணவுகளும் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிப்பட்டி, கொல்லமேடு, புதூர், சவுளூர், மலையாண்டஹள்ளி, சின்னப்பள்ளிபட்டி, கூரம்பட்டி, செட்டிமாரன் பட்டி, குட்டூர், குட்டி வெடிச்சாம்பட்டி, ராமாபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் தொன்னையன் கொட்டாய், புரிநகர், டிங்கான் நகர், எம். ஜி. ஆர். நகர் மற்றும் பரங்கிநகர் ஆகிய கிராம மக்களை சேர்ந்தவர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed