கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் நடைபெற்று வரும் பேருந்துநிலைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் ; கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, களியாக்காவிளையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 – 2025 -ன் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்கூரை தூண் அமைக்கும் பணிக்கு அஸ்திவாரம் போடுவதற்காக மண் தோண்டப்பட்ட இடத்தில் வடிகால் தண்ணீர் தேங்கியிருந்தது. தற்போது தேங்கப்பட்டிருந்த வடிகால் நீரை அப்புறப்படுத்தி மண் நிரப்பி சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் முகப்பு கூரை அமைக்க துறை சார்ந்த அறிவுறுத்தப்பட்டது. இப்பணிகளை நவம்பர் மாதம் இறுதிக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரக்கு அறிவுறுத்தினார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தெரிவித்தார்கள்.
நடைபெற்ற ஆய்வில் உதவி செயற்பொறியாளர்கள்.செயல் அலுவலர், இளநிலை பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
