ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகிற 14-ம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில், ஆண்டாள் தேரையும், தேர் வரும் பாதைகளையும் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் மாவட்ட எஸ்.பி கௌதம் கோயில் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தேரை பார்வையிட்டு விட்டு பின்னர் தேர் வரும் பாதைகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி பாலசுந்தரம் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி எதிரொலி / 8939476777
