மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான்பட்டியில் உள்ள பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு கடந்த திமுக ஆட்சியில் புனரமைப்பு வேலைகள் செய்வதற்கு 2 கோடியே 60 லட்சத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டது.


தற்பொழுது தவெக ஆட்சியிலும் புனரமைப்பு வேலைகள் நடந்து வருகிறது. இருப்பினும் கால்வாய்கள் கட்டுமான வேலைகள் தரமாக இல்லை கால் வைத்தால் நொறுங்கி விழும் நிலையில் தான் உள்ளது. பழுதடைந்த படிகள் சரி செய்யப்படாமல் வண்ணம் தீட்டி உள்ளார்கள். ஆக மொத்தத்தில் பெயரளவில் பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு புனரமைப்பு வேலைகள் நடைபெறுகிறது.

மேலூர், நீர் வளத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கோரிக்க வைக்கப்பட்டுள்ளது.
செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
