மதுரை மாவட்டம் சோழவந்தானில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சோழவந்தான் எம் வி எம் அதிபதி மஹாலில்
2.8.26. அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அரிமா சங்க புதிய தலைவராக 3 வது முறையாக சோழவந்தான் தொழிலதிபர் டாக்டர் எம் மருதுபாண்டியன் பொறுப்பேற்க உள்ளார். செயலாளராக ராசி ஸ்டுடியோ கண்ணனும் பொருளாளராக ஆனந்தும் பதவி ஏற்க உள்ளனர்.

புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியை அரிமா மணிகண்டனும் அரிமா சங்கத்தில் இணையும் புதிய உறுப்பினர்களை அரிமா செல்லப்பாண்டியன் அவர்களும் சேவை திட்டங்களை அரிமா சசிகுமாரும் தொடங்கி வைக்க உள்ளனர். பதவியேற்பு விழாவில் முதன்மை நிர்வாகிகள் பிரேமா, செல்லபாண்டி, அருண் ஜோதி, ரமேஷ் சுப்பையா, மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தில் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் புதிய உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed