பொன்னேரி நகராட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்கள் ஆணையின்படி மண்டல நகராட்சிகள் இயக்குனர் அவர்களின் உத்தரவின் படி பொன்னேரி நகராட்சி ஆணையர் திருமதி நளாயினி தலைமையில் சுகாதார ஆய்வாளர் ஆ சாமுவேல் முன்னிலையில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஸ்வச் பாரத் மிஷன் 2.0 கசடு கழிவு மேலாண்மை மற்றும் நடத்தை மாற்று தொடர்பு பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் கழிப்பறையின் சுத்தமாக பேணுவதை குறித்து விழிப்புணர்வு மற்றும் கழிவுநீர் வாகன பணியாற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரங்களோடு பணியாற்ற வேண்டும் என்றும்,

கழிவுநீர் வாகனங்கள் முறையாக நகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கழிவுநீர் வாகனத்தில் சேகரிக்கப்படும் கழிவு நீரை பாதுகாப்பான முறையில் பொன்னேரி நகராட்சியின் சுத்திகரிப்பு நிலையத்தில் விட வேண்டும் என்றும், கழிவுநீர் வாகனத்தில் பணி செய்கிற பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரங்களை அணிந்து பணி செய்ய வேண்டும் என்றும், இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கழிவுநீர் வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர் முறையாக நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. உரிமம் புதுப்பிக்கப்படாத வாகனங்கள் மற்றும் பொதுவெளியில் கழிவுநீர் வெளியேற்றம் செய்கிற வாகனங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் வாகனங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதுடன் காவல்துறையுடன் ஒப்படைக்கப்படும்.

மேலும், பொதுமக்கள் பயன்படுத்துகின்ற பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் சுத்தமாக வைத்திருக்கவும், உரிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் கோடீஸ்வரன் நகராட்சி மேலாளர் குமார் மற்றும் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் உதவியாளர்கள் மற்றும் நகராட்சி மேற்பரையாளர்கள் பரப்புரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed