திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் மீனவர்களின் ஆதாரமாக விளங்கும் முகத்துவாரம் மணல் தூர்ந்த காரணத்தால் அடைபடும் தருவாயில் உள்ளது.
27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டும் திட்டம் தோல்வியடைந்ததால், மீண்டும் முகத்துவாரம் அடைபடும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து, பழவேற்காடு மீனவர்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்தனர்.


இந்த நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பழவேற்காடு பகுதிக்கு வருகை தந்து முகத்துவத்திற்கு படகில் சென்றார். அங்கு முகத்துவாரப் பகுதியை பார்வையிட்ட போது மீனவர்கள் அமைச்சரை சந்திக்க முற்பட்டனர் அப்போது பழவேற்காட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் சந்திப்பதாக மீனவர்களை அங்கு வருமாறு அழைத்து படகில் ஏறி பழவேற்காடு பகுதிக்கு மீண்டும் திரும்பினார்.


பிறகு, மீனவர்களை அமைச்சர் சந்தித்தார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பதாக மீனவர்கள் இடத்தில் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ரவி,சென்னை மண்டலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளங்கோ, சென்னை மீன்பிடி துறைமுக திட்ட கோட்டம் முதன்மை பொறியாளர்கள் வசந்தி, சீனிவாசன், உதவி தலைமை செயற்பொறியாளர் சேனாதிபதி, உதவி செயற்பொறியாளர்கள் அக்ஷயா, ஸ்ரீதர் பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் ஆகிய அரசு அதிகாரிகள் மற்றும் த.வெ.க திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் அமைச்சரின் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

செய்திகள் ; பழவை முத்து /. எதிரொலி / 8939476777
