ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், வாணியவல்லம் ஊராட்சியில் ரூபாய் 50.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் , நயினார்கோயில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு குறித்தும் கேட்டறிந்து, ஸ்மார்ட் வகுப்பு நடைபெறுவதை பார்வையிட்டு மாணவர், மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் , நயினார்கோயில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று நோயாளிகளின் வருகை பதிவேடு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அங்குள்ள பழுதடைந்த வாகனங்களை அப்புறப்படுத்த மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து , நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சமத்துபுரம் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் , இராதாபுளி ஊராட்சியில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் சேதம் அடைந்த சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், சாலையினை மழைக்காலம் வருவதற்கு முன் சீர் செய்ய வேண்டுமென பொறியாளர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் , வாதவனேரி ஊராட்சியில் ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து , வாதவனேரி ஊராட்சியில் சீமை கருவேலம் மரங்களை அகற்ற ட்ரோன் கேமரா மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் சீமை கருவேலம் மரங்களை அகற்ற அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மேலும் , தானியாபுளி ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.60 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பி.கொடிக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூபாய் 29.70 இலட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக கட்டடம் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வில் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி , செயற்பொறியாளர் அழகேசன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய மேரி சாரல் , உதவி பொறியாளர் சம்பு முத்துராமலிங்கம் , ஒன்றிய பொறியாளர்கள் பிரதீப் , கணபதி , சொர்ணமுகி , செய்தி — மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி , ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்கள் , கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
