விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இரவு நேரத்தில் ஆறு பேர் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர் அது சமயம் ராஜபாளையத்தை சேர்ந்த முக்கிய நபர் ஒருவரே கொலை செய்ய திட்டமிட்டு கொண்டிருந்தனர்.

அது சமயம் அருகில் இருந்த ஒரு நபர் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் விரைந்து வந்து ஆறு பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். ராஜபாளையம் ஆவரம்பட்டி பாரதியார் தெரு, குமரன் தெரு, சீனிவாசன் புது தெரு ஆகிய தெருக்களைச் சேர்ந்த 6 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தீவிர விசாரணைக்கு பிறகு, அஜித் குமார் (18) தங்கேஸ்வரன் (23)
முரளிதரன் (23) புவனேஸ்வரன் (24)
மதியழகன் (20) அஜய் வயது (24) ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கொடுவாள், கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 தினங்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed