கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி விஹார் ஸ்டேடியத்தில் ஆல் இந்தியா ஷிட்டோரியோ கராத்தே டூ இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஜெ, பி. ஸ்போர்ட்ஸ் அகடமியை சேர்ந்த மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் விளையாட்டுத்துறை தலைவர் பீட்டர் சத்தியராஜ் தலைமையில் கலந்து கொண்டு விளையாடினார்கள்,

இப்போட்டியில் 8 பேர் தங்கப் பதக்கமும், 7 பேர் வெள்ளிப் பதக்கமும், 9 பேர் வெண்கலப் பதக்கம் வென்று கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கும் ஜெ,பி. அகாடமிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் இப்போட்டியில் 24 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதைப் பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்த ஜெ,பி,அகாடமியின் பயிற்சியாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் விளையாட்டு துறை தலைவருமான பீட்டர் சத்தியராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பொதுமக்கள் தெரிவித்து கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed