மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக சாலையின் ஓரங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றனர் அவ்வாறு பணிகள் நடைபெற்ற இடங்களில்
பணிகள் முடிந்தும் பல இடங்களில் பள்ளங்களை மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர் இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சோழவந்தான் அருகே தச்சம்பத்து மேலக்கால் திருவேடகம் நாராயணபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி சாலையின் ஓரங்களில் பெரிய அளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது ஒரு சில இடங்களில் பணிகள் முடிந்த பின்பும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது சாலையின் ஓரங்களில் தோண்டிய பள்ளங்கள் மூலம் குவிந்து கிடக்கும் மண்குவியல்களால் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

ஆகையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சோழவந்தான் கிராமப் பகுதி மற்றும் நகர் பகுதிகளில் குடிநீர் பணிகளுக்காக தோண்டிய பள்ளங்களை பணிகள் முடிந்தவுடன் மூட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed