ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டி டோல்கேட்டை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சிஐடியு மற்றும் அனைத்து மோட்டார் வாகன சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த முற்றுகை போராட்டத்திற்கு சாலை போக்குவரத்தின் பொதுச் செயலாளர் திருமலை மற்றும் அனைத்து மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு குழு தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஏராளமான கலந்து கொண்டனர். டோல்கேட் அகற்ற வேண்டும் என முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் நத்தம் பட்டி சப் இன்ஸ்பெக்டர் உதயசூரியன் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் இன்று காலை நடைபெற்ற முற்றுகை போராட்டத்தால் டோல்கேட் அமைந்துள்ள பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது .

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
