பொன்னேரியில் பட்டாசு வெடித்து ஆர்வமுடன் ஜனநாயகன் திரைப்படத்தை காண சென்ற ரசிகர்கள். திரையரங்கிற்கு செல்லும் நுழைவாயிலில் குகை போன்று அலங்கரித்து விஜய் புகைப்படங்களை காட்சிப்படுத்திய ரசிகர்கள். ஆடல், பாடல், மேளதாளம் போன்ற கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் ஏதுமின்றி காணப்பட்ட திரை அரங்கம்.

நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் கடைசி திரைப்படமாக கூறப்படும் ஜனநாயகன் இன்று தமிழ்நாட்டில் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி துவங்கியதை தொடர்ந்து திரைப்படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என நடிகர் விஜய் அறிவித்த பின்னர் இறுதிப்படமாக ஜனநாயகன் படமாக்கப்பட்டது.

சென்சார் பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக ஜனநாயகன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளிவராமல் இழுபறி நீடித்து வந்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் அண்மையில் தணிக்கை துறை ஜனநாயகன் படத்திற்கு A சான்று வழங்கியதை தொடர்ந்து இன்று திரைப்படம் வெளியானது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் திரையரங்கில் காலை 9மணிக்கு வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட்டங்களோ, ஆரவாரம் ஏதுமின்றி திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை கண்டு களித்து வருகின்றனர். இதே போல பொன்னேரி திரை அரங்கில் காலை 11 மணிக்கு திரைப்படம் வெளியான நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடி ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

பொன்னேரி திரையரங்கிற்கு செல்லும் நுழைவாயிலில் குகை போன்று அமைத்து அதில் நடிகர் விஜயின் சிறு வயது முதல் தற்போது வரையிலான புகைப்படங்களை ரசிகர் மன்றத்தினர் காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். பெரிய அளவில் ஆடல், பாடல் மேளதாளம் போன்ற கொண்டாட்டங்கள், ஆரவாரங்கள் ஏதுமின்றி ரசிகர்கள் ஜனநாயகன் படத்தை ரசித்து வருகின்றனர்.

செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed