மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்தது நிலையில் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கன்னய் நகர் பகுதியைச் சேர்ந்த முகித்துள் மண்டல் என்பவரின்
உறவினர்சமீம் மண்டல் (வயது 23)
என்பவர் மதுரையில் மருத்துவமனையில் கட்டுமான பணிக்காகமேற்குவங்க மாநிலத்தில் இருந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் கட்டுமான பணிக்காக ஒரு கூம்பு குழாயில் மணல் நிரப்பி இருந்த போது திடீரென சாய்ந்ததில் சமீம் மெண்டல் மேல் குழாய் விழுந்தது. இதில் சமீம் பலத்த காயப் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் அதனைத் தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சை அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார் இதனை தொடர்ந்து ஆசியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சமீம் மரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியில் இருந்த மேற்குவங்க கூலி தொழிலாளி இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed