
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு வலுதூக்குவோர் சங்கம், வேலூர் மாவட்ட பலு
தூக்குவோர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் 3 நாள்
மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான வலுதூக்கும்
போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி விளையாட்டு
அரங்கில் தொடங்கியது.


சாம்பியன்ஷிப் ஒருங்கிணைப்புக் குழு
தலைவர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க
மாவட்ட பொருளாளர் ஒய். நந்தகுமார் வரவேற்றார். போலீஸ் துணை சூப்பிரண்டு வி.எஸ்.ஜி.சுரேஷ் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

26 மாவட்டங்களை சேர்ந்த 290 ஆண்கள், 120 பெண்கள்
என மொத்தம் 410 பேர் பங்கேற்க உள்ளனர். நகரமன்ற தலைவர்
எஸ்.சவுந்தரராஜன், ரோட்டரி மாவட்டமுன்னாள் ஆளுனர்
ஜே.கே.என்.பழனி, வக்கீல் கே.எம்.பூபதி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.சிவா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.சீதா
ராமன், வக்கீல் கே.ரஞ்சித்குமார், சீவூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


வேலூர் மாவட்ட வலு தூக்குவோர் சங்க தலைவர் எஸ்.ஏ.சேட்டு, செயலாளர் சி.மூர்த்தி, சர்வதேச நடுவர் எஸ்.
நாகராஜ், சங்க செயலாளர் பி.தெய்வசிகாமணி, சீனியர் உலக
வலுதூக்கும் வீரர் வி.லோகநாதன், ஆசிய வலுதூக்கும் வீரர்
ஜி.ரவிகுமார், எம்.டி.எத்திராஜ், யு.லிங்கம் தேசிய வலுதூக்கும்
வீரர் ஏ.வி.அசோகன், மாநில வலுதூக்கும் வீரர் சி.நவீன்குமார்
உள்ளிட்டோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
