வத்திராயிருப்பு ரோட்டரி கிளப், அரசு மருத்துவமனை மற்றும் சித்த மருத்துவ பிரிவு ஆகியவை இணைந்து வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ முகாம் நடத்தின. நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எம் முகாமிற்கு
ரோட்டரி சங்க தலைவர் வீரிய பெருமாள் தலைமை தாங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். வத்திராயிருப்பு அரசு தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். நாடார் பள்ளி செயலர் கருப்பையா பரிசோதனை பிரிவை துவக்கி வைத்தார்.

வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை
சித்தா மருத்துவர் ராஜி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இம்முகாமில் வத்திராயிருப்பு, கூமாபட்டி, சேது நாராயணபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். ரோட்டரி சங்க பட்டய தலைவர் குமாரசாமி,
முன்னாள் தலைவர் சிவக்குமார்,
பொருளாளர் பாண்டியன்
முகாம் தலைவர் மாரியப்பன்
மற்றும் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், முத்துராமலிங்கம், மணிகண்டன், மாணிக்கம், ஜெயபிரகாஷ்,
முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

