ராஜபாளையத்தில், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் பெண்களுக்கான நீண்ட துார நடை போட்டி நிகழ்ச்சி நடந்தது. ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் தொடங்கிய போட்டியை கே.எஸ்.ஆர் பஸ் கம்பெனி மேனேஜிங் டைரக்டர் பிரசன்னா துவக்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் மாணவிகள் போதை தடுப்பு குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

3 கி.மீ, மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளாக நடந்த போட்டிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். காந்தி சிலையில் தொடங்கி ரயில்வே ஸ்டேஷன், பஞ்சு மார்க்கெட் அருகே, டி.பி மில்ஸ் ரோடு வழியாக ஜவகர் மைதானத்தில் நிறைவடைந்தது.
இரண்டு பிரிவுகளிலும் ஜோசபின் சுமதி, முகவூரை சேர்ந்த முருக லட்சுமி முறையே முதலிடம் பிடித்தனர். போதையில்லா தமிழகம் படைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் சுபா செய்திருந்தார்.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
