மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினருடைய அலுவலகத்தில் போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் போரூர் ஜனா, சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் அவர்களை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார். அதில், மதுரவாயில் தொகுதியில் நிலவும், வணிகவரி மற்றும் சொத்து வரி தொடர்பாக நிலவும் குளறுபடிகளை ஆதார ஆவணங்கள் மற்றும் தனியார் பலர் மேல்முறையீட்டு வழக்கு உள்ளதையும் எடுத்துக் கூறி, இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார்.

சொத்து வரியில் உள்ள பிரச்சனைகளை முழுமையாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் போரூர் மக்கள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், இப் பிரச்சனை குறித்து, சட்டமன்றத்தில் தான் பேசி உள்ளதாக தெரிவித்தார்.
செய்திகள் / ஜனார்த்தனன் / எதிரொலி / 8939476777

