வெறி நாய்களை அழிக்கவோ , துன்புறுத்தவோ எங்களால் முடியாது, மீறினால் ஜெயில் தண்டனை தான் கிடைக்கும் என சுகாதார ஆய்வாளர் பேசிய பேச்சால் சர்ச்சை…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,கப்பலூர் பஞ்சாயத்தில் உள்ள வையம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கிராம மக்கள் வெறி நாய்கள் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை கட்டுப்படுத்த கூறியும் ,கிராம மக்கள் முறையிட்டனர்.அதற்கு பதில் அளித்த சுகாதார ஆய்வாளர், வெறிநாயை கட்டுப்படுத்த முடியாது, அதனை அழிக்கவோ, துன்புறுத்தவோ எங்களால் முடியாது, மீறினால் சிறைத்தண்டனை தான் கிடைக்கும், அதனை மீறி நடவடிக்கையும் எடுக்க முடியாது, மீறினால் ப்ளூ கிராஸ் அமைப்பு தங்கள் மீது வழக்கு தொடர்கின்றன, ஆகையால் வெறிநாய்க்கடியில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
