திருமங்கலம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு குடியுரிமை, வாக்குரிமை கேட்டு தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு- காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தேமுதிக கட்சியினர் மனு. (நடைபெற உள்ள தேர்தல் முழுவதிலும் பழைய வாக்கு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததை சுட்டிக்காட்டியும், தேமுதிகவினர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் வலியுறுத்தல்)

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி ஊராட்சியில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. உச்சப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள்:

  1. வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்:
    EVM இயந்திரம் மூலம் வாக்கு செலுத்தும் முறையை நீக்கிவிட்டு, பழைய வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
  2. சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்:

இப்பகுதியில் அதிகளவில் உள்ள சீமைக் கருவேல மரங்களால் நீர்வளம் பாதிக்கப்படுவதாகவும், மக்களின் பாதுகாப்பு கருதி அவற்றை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  1. குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும்:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

  1. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு:

பள்ளக்காபுதுப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளதால், அதனை போக்க அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.

  1. நிரந்தர ரேஷன் கடை அமைக்க வேண்டும்:

உச்சப்பட்டி ஹவுசிங் போர்டு, பொம்பையாபுரம், சிவ நகர் ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து நிரந்தர ரேஷன் கடை அமைக்க வேண்டும். ரேஷன் கடைக்கான கட்டிடம் கட்டி 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால், அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

  1. நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்:

உச்சப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருவதால், அவர்களின் நலன் கருதி அப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

  1. இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை:

இப்பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை மற்றும் வாக்குரிமை வழங்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகள் அனைத்தையும் வெகுவிரைவில் நிறைவேற்றித் தருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் காளமேகம் / எதிரொலி . இன் / 8949476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed