வேலூர் மாவட்டம், குடியாத்தம் பங்கரிஷிகுப்பம் எம். ஜி .ஆர் நகரில் அனிதா இரவு பள்ளி சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா ஆசிரியர் திருமலை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.

ஆற்காடு கானா கவி காமராசர் படத்திற்கு மாலை அணிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குமரேசன் அனிதா இரவு பள்ளி படத்தை திறந்து வைத்தார் இரவு பள்ளி மாணவ மாணவியர் நடனம் பேச்சுப்போட்டி பாட்டு போட்டி கவிதை போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.


இந்த நிகழ்வில், அறம் அறக்கட்டளை தலைவர் விநாயகம், நாட்டாமை வெங்கடேசன் நிருபர் மூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர் உதயகுமார்மற்றும் பெற்றோர் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
