திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளியில் படித்து வந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம் என்பவர், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், 705 மதிப்பெண்கள் பெற்று, தென்னிந்திய அளவில் முதலிடம் பெற்றார். அவருக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.


பள்ளி ஆசிரியர்களும் சக மாணவர்களும் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். அருகில் மாணவரின் பெற்றோர் உடன் இருந்தனர்.



செய்திகள் ; பழவை முத்து / எதிரொலி / 8939476777

