மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-ஐ முன்னிட்டு சுமார் 300 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

முன்னதாக”மக்கள் தொகை கணக்கெடுப்பில், நான் சுய கணக்கெடுப்பை மேற்கொள்வேன் – என் பங்கேற்பு, என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு” என்ற கருத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.

உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.சித்தார்த் போகர்னா, அவர்கள் உடன் உள்ளார்.

செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed