கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் கணிதத்துறை இணைந்து தொழில்துறை கணிதம் குறித்த கருத்தரங்கம் இரண்டு நாட்கள் கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெறுகிறது.
கருத்தரங்கத்தின் தொடக்க விழாவிற்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் – செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். பயிலரங்கத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக, சாந்தி சொரூப் பட்நாகர் விருதாளர், தேசிய கஅறிவியல் அகாடமியின் மூத்த விஞ்ஞானி முனைவர் மைதிலி சரண், கருத்தரங்கக் குழு வல்லுநர், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கணிதம் , புள்ளியியல் துறை முன்னாள் இயக்குநர் முனைவர் பி.கந்தசாமி, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறைப் பேராசிரியர் – தலைவர், முனைவர் எஸ்.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து, கல்லூரி முதல்வர் – செயலர், முனைவர் பி.எல்.சிவக்குமார் , சிறப்பு அழைப்பாளர்கள் கருத்தரங்கின் தகவல் பலகையை வெளியிட்டனர். இக்கருத்தரங்கம் மாணவர்கள், ஆசிரியர்களிடையே உயர்தரமான தொழில்துறை கணிதக் கல்வியை மேம்படுத்துவதையும், பரஸ்பரக் கலந்துரையாடலை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்தரங்கத்தில் , கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட 30 கல்லூரிகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட பேராசிரிய பெருமக்கள், மாணவர் — மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கல்லூரி கணிதத்துறைத் தலைவர் முனைவர் ந. உமா வரவேற்றுப் பேசினார். நிகழ்வினைக் கணிதத்துறைப் பேராசிரியர்கள் மாணவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
