ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகர், ஜெ ஜெ நகரில் வசிப்பவர் செல்வகுமார் மகன் குரு பாலாஜி (வயது23) பொறியியல் பட்டதாரியான இவர் பல அரசியல் கட்சிகளில் இருந்து விட்டு, தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்று வருகிறார். இந்நிலையில், குரு பாலாஜி தான், அந்த கட்சியின் மாநில அளவிலான முக்கிய நிர்வாகி எனக் கூறி வந்துள்ளார். மேலும், தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முக்கிய பிரமுகர்கள் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனை வாட்ஸ் அப் மூலம் வெளியிட்டு வந்துள்ளார்.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன்பு குரு பாலாஜி செல்போன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒரு கிரஷர் அதிபர் ஒருவரை தொடர்பு கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் செங்கல் சூலைகளுக்கு மண் அள்ளும் உரிமம் பெற ரூபாய் 30 ஆயிரம், ராஜபாளையம் பகுதியில் மண் அள்ளும் உரிமம் பெற, ரூபாய் 50,000 லஞ்சம் கேட்டு பேசி உள்ளார்.

அதில், குரு பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூர் தவெக எம்.எல்.ஏ கார்த்திக் பெயரை பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த ஆடியோ விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கின் உதவியாளராகிய மல்லி வெற்றிவேல் (வயது 40) என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், போலீசார் குரு பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல் சூளை மண் அள்ளும் உரிமத்திற்கு அனுமதி வாங்க தவெக பிரமுகர் செல்போன் மூலம் லஞ்சம் கேட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
