திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி பகுதியில் தபால் துறையின் இயங்கும் அஞ்சலக அலுவலகம் ஒன்று உள்ளது. அந்த அஞ்சலகத்தில் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
அந்த அஞ்சலகத்திற்கு மக்கள் நேரடியாக சென்று தாங்கள் வெளிநாடு செல்வதற்கு மற்றும் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு போன்ற தேவைகளுக்காக, ஆதார் எடுக்க வேண்டும் என்பதற்காக எப்போது சென்றாலும், சர்வர் இயங்கவில்லை என பதில் அளித்து வாடிக்கையாளர்களை அழைகழிக்கிறார்கள்.


மேலும், நீங்கள் பலமுறை வருகிறீர்கள் நாங்கள் இந்த பதிலையே எத்தனை முறை சொல்கிறோம். மீண்டும், மீண்டும் ஏன் இங்கேயே வந்து தொல்லை செய்கிறீர்கள், என வாடிக்கையாளர்களை மீண்டும் இங்கு வராதீர்கள், என்ற தோரணையில் பதிலை சொல்கிறார்கள்.
மேலும், அந்த அஞ்சலகம் தினமும் கால தாமதமாக திறக்கப்பட்டு, சீக்கிரமாவே மூடுவதால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பணம் வரவு வைப்பது மற்றும் பணம் எடுப்பது, மகளிர் உதவித்தொகை போன்ற அரசின் பல்வேறு திட்டங்கள் சார்ந்தவற்றின் தொகைகளை பெறுவதற்கு அஞ்சலகத்தின் பயன்பாடு மிகவும் உபயோகமாக உள்ளது.


அதனால், பொதுமக்கள் அனைவரும் அஞ்சலகத்தின் பரிவர்த்தனைக்காக கால்கடுக்க வெகு நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அந்த அஞ்சலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மிகவும் அலட்சியமாகவும், பொறுப்பு இல்லாமலும் பணியாற்றுவதால் அந்த அஞ்சலக பரிவர்த்தனைக்காக வரக்கூடிய வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஆகவே, தபால்துறை உயர் அதிகாரிகள் பூந்தமல்லி அஞ்சலக அலுவலகத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, பூந்தமல்லி அஞ்சலகத்தில் இருக்கக்கூடிய குறைகளை சீர்செய்ய வேண்டி, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

செய்திகள் ; கோதை ஜெயராமன் எதிரொலி / 8939476777
