தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 35 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சங்கமும், வேல்ஸ் மருத்துவ மனை மற்றும் மருத்துவ கல்லூரியும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம், மற்றும் கண் சிகிச்சை முகாம், பிசியோதெரபி முகாம்கள் நடைபெற்றது.

அதற்கான ஏற்பாடுகளை, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகி ஆகியோரின் ஆலோசனையின் பேரில், வஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத்தின் சார்பில், ஊராட்சி செயலாளர் நவமணி செய்திருந்தார். அந்த முகாமில், வஞ்சிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை முறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி முறைகளும் வழங்கப்பட்டது.

மேலும், கண் சிகிச்சை முகாமில் இலவச கண் பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மேல்பரிந்துறை நடைபெற்றது. இந்த முகாமில் கண் பரிசோதனை செய்தவர்களில் 5 பேர் கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக வேல்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டனர். அதன்படி, அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளனர். மேலும், மருத்துவ முகாமில் ரத்தப் பரிசோதனை, சர்க்கரை வியாதி பரிசோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

வேல்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி அவர்களின் ஆலோசனை பேரில், முகாமுக்கு வந்திருந்த மருத்துவக் குழுவினர் கிராமப்புற பகுதியில் வேல்ஸ் மருத்துவமனை செய்து வரும் சேவைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு முன்னெடுத்து வரும் இலவச சேவைகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

வேல்ஸ் மருத்துவமனை தலைமை பிசியோதெரபி நிபுணர் டாக்டர் வித்யா லஷ்மி அவர்களின் ஆலோசனையின் பேரில், உதவி பிசியோதெரபி நிபுணர் டாக்டர் ஜனனி, கிளினிக்கல் பிசியோதெரபிஸ்ட் டாக்டர்.சபரி வாசன் ஆகியோர் பிசியோதெரபி குறித்த விளக்கம் அளித்து பிசியோதெரபி சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின், தேசிய குழு உறுப்பினர், பாலகிருஷ்ணன்,
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள், பொருளாளர் யாக்கோபு, செய்தி தொடர்பாளர் முத்து மற்றும் வஞ்சிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் பிரியதர்ஷன் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed