காவிரி கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 09/07/2026 வியாழக்கிழமை முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் செல்வகுமார் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள், மாணவர்களின் வளர்ச்சியில் கல்லூரியின் பங்கு குறித்து எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார். தி காவிரி கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார்.
தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் அவர்கள் கல்லூரியில் மாணவர்களின் ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி, தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்துதல் ஆகியவற்றோடு ‘ஏழைக்குக் கல்வி கொடுத்தல் தான் சிறந்த தர்மம்’ என்று கல்வியின் அவசியத்தை கூறி தலைமையுரையாற்றினார். தி காவிரி கல்வி நிறுவனங்களின் இணைச் செயலாளர் பொறியாளர் ஹரிசங்கர் அவர்கள் மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வகையிலும் மாணவர்கள் கற்றல் மேம்பாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் விதமாகவும் ஊக்கப்படுத்தி வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், துறைத்தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்தனர்.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் கவிதா நன்றியுரை வழங்கினார்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
