விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மத்திய அரசால் நடத்தப்படும் இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

6 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை வளர்க்கவும், பல புதிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசால் இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இதற்காக மாணவர்களின் புதிய படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்படுவார்கள். அம் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் பல்வேறு வகையான உதவிகளும் அரசால் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் மாணவர்கள் தங்கள் தனித்துவமான யோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு பெறுகின்றனர். இதில் சிறந்த யோசனைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை செயல்படும் மாதிரிகளாக உருவாக்க மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர்வு நடத்தப்பட்டதில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் உள்ள லயன்ஸ் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் J. டார்வின்மாதவ் ‘இன்ஸ்பயர் விருதுக்கு தேர்வானார்.

அவர் தூக்கத்தைக் கண்டறிந்து கணக்கீடு செய்யும் கருவியை உருவாக்குவதற்காக தனது திட்ட அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட தேர்வு குழு அவரை தேர்வு செய்துள்ளது.

பள்ளிக்குப் பெருமை சேர்த்த அந்த மாணவரை பள்ளி தலைவர் சுந்தராஜப் பெருமாள், பள்ளியின் தாளாளர் விஜயகுமார், பள்ளி பொருளாளர் டாக்டர் பால்சாமி, பள்ளி துணை தலைவர் ஆரியன் மதுரம், துணைச்செயலாளர் கூடலிங்கம், முதல்வர் சீனிவாசகம், துணை முதல்வர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் வாழ்த்திப் பாராட்டி கௌரவித்தார்கள்.

செய்திகள் ; K.தேவ தர்ஷினி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed