போரூர் பகுதி பொதுமக்கள் சார்பாக, த.வெ.க கட்சியினர் மற்றும்
போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் மூலம், போரூர் பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சினைகளை குறித்து,
மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ரேவந்த் சரண் அவர்களிடம் தெரிவித்தனர்.

அதிலும் குறிப்பாக சென்னையின் மக்களுக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளில் ஒன்றான போரில் ஏரியில், தற்போது அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து ஏரி முழுவதும் அதிக அளவில் படர்ந்து உள்ளது. அதனால் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவு கொண்ட அந்த ஏரியின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருப்பதை, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் அவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான போரூர் ஏரியின் தற்போதைய சூழ்நிலையை உணர்ந்த, எம்.எல்.ஏ ரேவந்த் சரண் அவர்கள் உடனடியாக, போரூர் ஏரியில் இருக்கக்கூடிய ஆகாய தாமரை செடிகளை அப்புறப்படுத்தி கொடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது போரூர் ஏரியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக ஏரியில் படர்ந்து இருக்கக்கூடிய ஆகாய தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதை அறிந்த போரூர் பகுதி மக்கள் தங்களுடைய கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, ஏரியில் தூய்மை பணியை செய்து வரும் மதுரவாயல் எம் எல் ஏ ரேவந்த் சரண் அவர்களுக்கு நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.

செய்திகள் ; போரூர் ஜனார்த்தனன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *