சிவகங்கை நகராட்சி சேர்மன் ஆனந்த் அவர்கள் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் சிவகங்கை நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு என்ற பெயரில் ஆணையாளரின் சீட்டில் அமர்ந்து பேசியதை ஏற்க முடியாது. ஆணையாளர் என்பவர் ஒரு அரசு அதிகாரி. அந்த சீட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குனர்கள் அமரலாம்.

ஆனால், ஒரு சட்டமன்ற உறுப்பினர் அதில் அமர்வதற்கு எந்த வகையிலும் இடமில்லை. மேலும், சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்து பேசும்போது அவரது சில கட்சி நிர்வாகிகளையும் உடன் கூட்டி வந்து ரீல்ஸ் எடுத்து ரீல்ஸ் மோகத்தில் செயல்படுவது ஏற்கத்தக்கது அல்ல .
நான் ஏற்கனவே கடந்த 03.06. 2026 அன்று எந்தவித கட்சி வித்தியாசமும் பார்க்காமல் மக்கள் பணி என்ற அடிப்படையில் சிவகங்கை நகராட்சிக்கு குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால் இதற்கு தாங்கள் பரிந்துரை செய்து இடம் ஒதுக்கி வழங்குமாறு ஒரு பதிவு தபாலை அனுப்பி இருந்தேன்.

அதற்கு இன்று வரை எந்தவித பதிலும் இல்லை. எனவே சிவகங்கை எம்.எல்.ஏ. அவர்கள் ஆணையாளரை எதிரே அமர வைத்து ஆணையாளரின் இருக்கையில் அமர்ந்து பேசியதை திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777
