மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பாண்டியன் நகர் பகுதியில் பிரபாகரன் என்பவர் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த மருது பாண்டி வசித்து வருகிறார். தோட்டத்தை காவல் காக்க வேலை பார்த்து வரும் இவர் பாதுகாப்பிற்காக இரண்டு நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த இரண்டு நாய்களும் நேற்று ஒன்று கொன்று சண்டையிட்ட நிலையில் தோட்டத்தில் இருந்த 80 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுள் விழுந்த இரண்டு நாய்களும் உயிர்க்காக போராடியது நாய்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பிரபாகரன் மற்றும் மருதுபாண்டி உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சோழவந்தான் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு நாய்களை வலைகள் உதவியுடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். கிணறு மட்டமாக இருப்பதால் நாய்கள் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக அதிகாரிகள் கூறிய நிலையில், மலையடிவாரப் பகுதி என்பதால் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதிக்கு வரும் நிலையில் அவைகளும் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக கூறும் அதிகாரிகள் உடனடியாக கிணற்றுக்கு பாதுகாப்பு சுவர் எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றனர்.

கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாய்களை மீட்ட தீயணைப்புத் துறையினரை இந்த பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed