சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தைராணி நாச்சியார் நேற்று ( செவ்வாய்க்கிழமை) நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நகரில் கழிவுநீர் தேங்கி நிற்பது , மற்றும் குப்பைக் கிடங்கு பிரச்சனைகள் தொடர்பாக சிவகங்கை நகராட்சி ஆணையாளரிடம் பேசினார். அப்போது ஆணையாளர் எழுந்து தனது இருக்கையில் அமருமாறு எம்.எல்.ஏ. வை கேட்டுக் கொண்டார். அப்போது அதை அவர் மறுத்து ஆணையாளரின் எதிரே உட்காரப் போனார் .
அப்போது ஆணையாளர் பணிவுடன் பேசி தனது இருக்கையில் அமருமாறு மீண்டும் பணிவுடன் கேட்டு கொண்டார். அதன் பின் எம்.எல்.ஏ. குழந்தைராணி நாச்சியார் அமர்ந்து நகர் மக்களின் பிரச்சினைகளான கழிவு நீர் தேக்கங்கள் குப்பைக் கிடங்கு போன்றவை குறித்து பேசிவிட்டு இவற்றை சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையாளரை கேட்டுக் கொண்டு வெளியில் வந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ.வும் ஆணையாளரும் பேசினார்கள். அப்போது ஆணையாளர் பேசும்போது ;
எம்.எல்.ஏ. அவர்களை நான் தான் எனது இருக்கையில் அமரச் செய்தேன் என்று கூறினார். இதன் பின்னர் நகராட்சித் தலைவர் ஆனந்த் கூறிய குறைபாடுகள் குறித்து குழந்தைராணி நாச்சியார் பதில் கூறும்போது…. மக்கள் பிரதிநிதியான நான் திட்டச் செயல்பாடுகள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறன? என்பதை ஆய்வு செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆணையாளரின் பணிவான வேண்டுகோளுக்கு இணங்க அவர் இருக்கையில் அமர்ந்து பேசினேன். இதை குற்றமாக எடுத்து திமுக பெயரில் அரசியல் ஆக்க வேண்டாம். நான் உள்ளே வந்ததற்கு இவ்வளவு வன்மத்தை காட்டுகிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
செய்திகள் ; ஆனந்தன் சிவகங்கை / 8939476777
