திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், திருப்பாலைவனத்தில் பாரதிய ஜன சங்கம் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஷியாமா பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட ஜனசங்கம் என்ற சிறிய அரசியல் இயக்கம்,தற்கால இந்தியாவின் மிகப்பெரிய தேசிய இயக்கமான பாரதிய ஜனதா கட்சியாக படிப்படியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது.பாஜகவின் வேரான ஜனசங்கத்தின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி 1953 ஆம் ஆண்டு ஜூன் 23 மறைந்தார். அவரது பிறந்த நாள் ஜூலை-6 ஆகும். இந்த நாட்களில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அவருக்கு புகழஞ்சலி செலுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன்படி பாஜகவினர் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர்
எஸ்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், திருப்பாலைவனம் பூத் நம்பர் 20-ல் பாரதிய ஜன சங்கம் நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் லயன்.கலைவாணி ஏற்பாட்டில் அவரது திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பாலைவனத்தில் உள்ள
அங்கன்வாடிக்கு பிரஷர் குக்கர் வழங்கப்பட்டது.பின் அங்கன்வாடி வளாகத்தில் மரச்செடி நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பாலைவனம் கிளை தலைவர் சுசிலா உடன் இருந்தார்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
