சிவகங்கை நகராட்சி நிர்வாகத்திற்கு சமீப காலமாக தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
நகரின் போக்குவரத்து இடையூறுகளையும் மக்களின் வசதிகளையும் செய்து தரக்கூடிய நகராட்சி நிர்வாகமே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது சரியல்ல என்று நகர் மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகிறார்கள்.

வருவாயை காரணம் காட்டி, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் திடீர், திடீரென சாலைகளின் ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக தகர கடைகளுக்கு நகராட்சி அனுமதி கொடுப்பதற்கு பலதரப்பட்ட பொது நல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிவகங்கை நகரில் பழைய கோர்ட் வாசலின் அருகில் அறிஞர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்ட தியாகி ராமச்சந்திரா பூங்கா உள்ளது. இந்த பூங்காவை மறைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திடீர் கடை போடப்பட்டுள்ளது. இந்த கடையானது சிவகங்கை – திருச்சி செல்லும் பிரதான சாலையின் மேலே உள்ளது. இந்தக் கடையை திறந்தால் வாகன விபத்தும் உயிர்ச் சேதமும் கண்டிப்பாக ஏற்படும் . எனவே இந்த கடையை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாகம் நடைமுறை விழிகளை மீறி திடீர் கடைகளுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும்.

இதே போல், சிவகங்கை நகரில் மக்கள் அதிகமாகக் கூடும் சிவன்கோவில் முன்பும், வாரச் சந்தைக்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கு இடையில் ஒரு கடையும் , தாய் சேய் மகளிர் மருத்துவமனைக்கும் காவலர் குடியிருப்புக்கும் இடையில் இரண்டு தகரக் கடைகளும், தாலுகா அலுவலகத்தின் கிழக்குப் புறம் சில கடைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது போக்குவதற்கு இடையூறாக உள்ளது.

சிவகங்கை நகரில்
போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக 30 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே இதுபோன்ற திடீர் கடைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறை நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

செய்திகள் ; ஆனந்த் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed