கிருஷ்ணகிரி அருகே உள்ள செம்படமுத்தூர், அம்மனேரி, கூழியம், கும்மனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரி மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டி, அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் மாதேஷ், திப்பனபள்ளி ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்படமுத்தூர், அம்மனேரி, கும்மனுர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள ஏரிகள் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இந்த நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த விவாகரத்தில் செம்படமுத்தூர், அம்மனேரி, கூழியம், கும்மனூர், தாசரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிகளில் மீன் வளர்க்க பொது ஏலம் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தனர்.
ஏரி ஆக்கிரமிப்புகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த முற்றுகைப் போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

செய்திகள் / மாருதி மனோ எதிரொலி / 893946777
